search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூட்ரினோ ஆய்வு திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காது - விஞ்ஞானி விவேக் தத்தார்
    X

    நியூட்ரினோ ஆய்வு திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காது - விஞ்ஞானி விவேக் தத்தார்

    நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காது என்று விஞ்ஞானி விவேக் தத்தார் கூறினார். #NeutrinoProject

    தேனி:

    தேனி அருகே பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர்மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த மையம் அமைந்தால் சுற்றுச்சூழல் மாசுபடும். விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என விவசாயிகள் ஆவேசம் அடைந்தனர். அதனை தொடர்ந்து இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நியூட்ரினோ விஞ்ஞானி விவேக் தத்தார் தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் முதல் கட்ட பணி வெற்றிகரமாக முடிந்து உள்ளது. நியூட்ரினோ மாதிரி திட்டம் மதுரையில் வைக்கப்பட்டு உள்ளது. நியூட்ரினோ ஆய்வு நடத்துவதால் எந்தவித கதிர்வீச்சும் இருக்காது. இதன் வேகம் ஒலியினை விட குறைவானது. இங்கு அமைக்கப்படும் அனைத்து எந்திரங்களும் இந்திய மாணவர்களை கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படமாட்டாது.

    ஆய்வு மையம் பூமிக்கு அடியில் அமைக்கப்படவில்லை மலைக்கு கீழ்தான் அமைக்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் எதுவும் பாதிக்காது.வளி மண்டலத்தில் உள்ள காஸ்மிக் துகள்களை ஆய்வு செய்வதுதான் இதன் நோக்கமாகும். இதற்காக 50 ஆயிரம் டன் மின்காந்த துகள்கள் நியூட்ரினோ ஆய்வு மையத்தில் இருப்பு வைக்கப்படும். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினால் தான் நியூட்ரினோ துகள் பற்றி உண்மை நிலை தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NeutrinoProject

    Next Story
    ×