search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- திருவண்ணாமலையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- திருவண்ணாமலையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பசுமை விரைவு சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.#GreenwayRoad #DMK
    திருவண்ணாமலை:

    காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டம் வழியாக சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த அளவீடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    விளை நிலங்கள், பசுமை நிறைந்த வனப்பகுதிகள், மலைகளை அழித்து போடும் இந்த சாலை திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பசுமை சாலை திட்டத்தை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் கடந்த சனிக்கிழமை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த நிலையில், பசுமை விரைவு சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் முன்னிலை வகித்தார். ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள், பொது மக்கள் பலரும் கலந்துக் கொண்டு பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நாளை கருப்புகொடி ஏற்றி போராட்டம் செய்ய உள்ளனர். #GreenwayRoad #DMK
    Next Story
    ×