என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருதுநகரில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மகன் செல்லப்பாண்டி. சுந்தரராஜ் முதல் மனைவியை பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த மே மாதம் 21-ந்தேதி செல்லப்பாண்டி தனது நண்பர் மைதீன்பாட்சா (வயது24)வுடன் தந்தை சுந்தரராஜை சந்தித்து பணம் கேட்டார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லப்பாண்டியும், மைதீன் பாட்சாவும் தன்னை தாக்கியதாக விருதுநகர் கிழக்கு போலீசில் சுந்தரராஜ் புகார் செய்தார்.
இந்த வழக்கில் மைதீன் பாட்சா உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மைதீன்பாட்சா தனது நண்பர் அஜித்துடன் அல்லம்பட்டி காமராஜர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுந்தரராஜ் வாகனத்தில் வந்தார். அவர் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் மைதீன் பாட்சாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டார். பலத்த காயம் அடைந்த மைதீன்பாட்சா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் மைதீன் பாட்சாவின் தந்தை சேக்அப்துல்லா புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சுந்தரராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.