search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமலையில் விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழ விற்பனை மும்முரம்
    X

    சிறுமலையில் விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழ விற்பனை மும்முரம்

    சிறுமலையில் பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மும்முரமாக விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே சிறுமலை வனப் பகுதியில் விவசாயிகள் பலா, எலுமிச்சை உள்ளிட்ட வைகளை விளைவித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது.

    இதனால் வன விலங்குகள் தண்ணீர் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. விவசாயிகளும் மழை இல்லாமல் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வமாக பணிகளை தொடங்கினர்.

    இப்பகுதியில் முக்கியமாக பலா விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து திண்டுக்கல் நாகல்நகர் பாலம் அடியில் உள்ள சிறுமலை செட்டிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலாப் பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தற்போது பலாப்பழங்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் அமோகமாக உள்ளது. எனவே சிறுமலை செட்டிற்கும் அதிக அளவில் பலாப்பழங்கள் வரத்தொடங்கி உள்ளன. ஒரு பழம் ரூ.70-ல் இருந்து தரத்திற்கேற்ப ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களைகட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×