என் மலர்

  செய்திகள்

  மீஞ்சூரில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை
  X

  மீஞ்சூரில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீஞ்சூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் நடந்தது. அவர்கள் வீதி, வீதியாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
  பொன்னேரி:

  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி அமைத்துள்ளார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி ‘ஆப்’ அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

  ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவர்கள் உறுப்பினர் சேர்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

  இந்த நிலையில் மீஞ்சூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பொன்னேரி சேகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்புச்செழியன், ரஜினி வெங்கட், ஒன்றிய நிர்வாகிகள் நீலகண்டன், நாராயணசாமி, ரஜினி சுரேஷ், மீஞ்சூர் நகர நிர்வாகிகள், ரஜினி சங்கர், மகளிர் அணி நிர்வாகி கவுரிசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வீதி, வீதியாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
  Next Story
  ×