என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஞ்சல் அலுவலம் முன்பு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிங்காரப்பேட்டை:

    ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஞ்சல் அலுவலம் முன்பு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு வட்டார தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். தெற்கு வட்டார தலைவர் அயோத்தி, நகர தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெயலட்சுமி ஞானவேல், மத்தூர் வட்டார தலைவர் லோகநாதன், மாவட்ட பொது செயலாளர் மத்தூர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் அணைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட கோரியும், டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு பதில் கூறாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் வட்டார தலைவர் விஜியகுமார், எஸ்.சி., எஸ்.டி. வட்டார தலைவர் இளையராஜா, ராமச்சந்திரன், கோபிநாதன், ராமூர்த்தி மற்றும் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×