என் மலர்
செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் தொகுதி காங்கிரஸ் கட்சி மற்றும் சார்பு அமைப்புகள் சார்பாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். “பவானி ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும்“, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்“ உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.கே.விஜயன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் எஸ்.ஸ்ரீதர், டி.ஆர்.ராஜேந்திரன், நகர தலைவர்கள் ஆர்.துரைசாமி, இனாயத்துல்லா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.கே.சுப்பிரமணியம், மீனாஹரி எச்.ராமலிங்கம், நகர தலைவர் எம்.தங்கமணி, மாவட்ட துணைத் தலைவர்கள் டி.வி.பி.ஜெயகுமார், பி.ஆர்.ரங்கராஜன், ரஹ்மத்துல்லா, ரகுராம், லோகநாதன், விபின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






