என் மலர்
செய்திகள்

காசிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க பிரமுகர் கைது
காசிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க பிரமுகரை பறக்கும் படை அதிகாரி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷனர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனினும் தேர்தல் கமிஷன், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை காசிமேடு, சூரியநாராயணன் தெருவில் காரில் சுற்றிய படி அரசியல் கட்சியினர் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
பறக்கும் படை அதிகாரி கதில்வேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து காரை மடக்கி பிடித்தனர்.
மேலும் காரில் இருந்த தி.மு.க. பம்மல் நகர செயலாளர் கருணாநிதியை கைது செய்தனர். ரூ 17 ஆயிரம் ரொக்கம் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story