search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
    X

    ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்

    ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஏற்கனவே கிரெடிட் கார்டு, ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்களை தயாரித்து மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டனர். சிலர் ஒரு படி மேலே சென்று வாட்ஸ் ஆப் செயலி போன்ற அழைப்பிதல்களை கூட அச்சடித்து மிரள வைத்தனர்.

    இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய குமார் என்பவர் தன்னுடைய மகனுக்கு காது குத்தும் விழாவுக்கான அழைப்பிதழை வித்தியாசமாக செய்ய முடிவெடுத்தார். அதன்படி, உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான நீர், உணவு ஆகியவை போல இந்தியாவில் தற்போது கட்டாய தேவையாகிவிட்ட ஆதார் அட்டையின் வடிவத்தில் அழைப்பிதழை அச்சடிக்கலாம் என முடிவு செய்து அதை நிறைவேற்றியும் காட்டி விட்டார்.

    பார்ப்பதற்க்கு அச்சு அசல் ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அழைப்பிதலில் சிறுவனின் புகைப்படம், பெயர், விழா நடைபெறும் நேரம், இடம் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழா நடைபெறும் நேரம், நாள், மாதம், வருடம் ஆகியவை ஒன்றினைத்து ஆதார் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
    Next Story
    ×