என் மலர்

  செய்திகள்

  நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு: சுப்ரமணியன் சுவாமி
  X

  நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு: சுப்ரமணியன் சுவாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

  தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் தரப்பில் எம்எல்ஏக்கள் பலரும் சசிகலாவை முதல்வராக பொறுபேற்க வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என ஒரு பிரவு எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதராக சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பா.ஜ.க எம்பி சும்பரமணியன் சுவாமி நேற்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

  இந்நிலையில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். இதில் ‘‘தமிழக சூழல் குறித்து நாளைக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 32ன் படி ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×