என் மலர்
செய்திகள்

சட்டசபையில் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்
புதுச்சேரி:
குடியரசு தினத்தையொட்டி புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங் கேற்றனர்.
இது போல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவையொட்டி சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., துணை தலைவர்கள் விநாயக மூர்த்தி, காந்திராஜ், தேவதாஸ், புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, செயலாளர்கள் சாம்ராஜ், செந்தில் குமரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, சேவாதளம் சிபி, குலசேகரன், வட்டார தலைவர் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுவை பிப்டிக் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பிப்டிக் மேலாண் இயக்குனர் கரிகாலன், பொது மேலாளர்கள் ஆதிமூலம், சுரேஷ்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுவை வர்த்தக சபையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. துணை தலைவர் சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து விழாவில் கலநது கொண்ட அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் இணை பொதுச் செயலாளர் தேவக்குமார், பொருளாளர் தண்டபாணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, ஆனந்த முருகேசன், முகம்மது சிராஜ், ஞான சம்பந்தம், தமீம், உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அலுவலக செயலாளர் மரிய சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜிப்மர் இயக்குனர் பரிஜா தேசியகொடி ஏற்றினார்.