என் மலர்
செய்திகள்

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள்நல கூட்டணியாக தேர்தல் காலங்களிலும், மக்கள் நல கூட்டு இயக்கமாக சாதாரண காலங்களில் மக்களின் கோரிக்கைகளுக்காக செயல்படுவோம். புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
கருப்பு பணத்தை ஒழிப்பதாகவும், ஊழலை ஒழிப்பதாகவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகவும் கூறி பிரதமர் ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக புதுவை மிஷின்வீதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித்கிறிஸ்தவர்களுக்கு குரு பட்டம் வழங்க கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.