என் மலர்
செய்திகள்

பரமத்திவேலூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பேரின்பன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 24).
இவர், நேற்று இரவு 8.30 மணி அளவில் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கீரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென தினேஷ்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார் இந்த விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் தினேஷ்குமார் இறந்து விட்டார்.
இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு நாமக்கல் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை அங்கு நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.






