என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கபடி விளையாட்டில் மோதல்
ஆண்டிப்பட்டி அருகே கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் தாக்கப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் கபடி விளையாட்டு நடந்தது. இதில் சிவனேசன் ஒரு அணி சார்பிலும், செல்வராஜ் இன்னொரு அணி சார்பிலும் விளையாடினர்.
ஊருக்கு வெளியே உள்ள மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் போது திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் செல்வராஜ் கல்லால் சிவனேசனை தாக்கினார். காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
Next Story






