search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினை: லாரிகள் ஓடாததால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினை: லாரிகள் ஓடாததால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாமக்கல்- சேலம் மெயின் ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் லாரிகள் வாரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் சுமார் 2.25 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. லாரிகளை வாடகைக்கு எடுப்பவர்கள் அல்லது முகவர்கள் வாடகை தொகையை பெரும்பாலும் ஓட்டு நர்களிடம் பணமாகவே அளித்து விடுகின்றனர். அந்த வாடகையும் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளாகவே இருக்கும்.

    இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் லாரி தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரூபாய் நோட்டு பிரச்சினையால் தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இன்று 4-வது நாளாக லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல்- சேலம் மெயின் ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் லாரிகள் வாரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும், லாரி பட்டறைகளிலும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள. இது போல் மணல் குடோன்களிலும் மணல் ஏற்றாமல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    வட மாநிலங்களுக்கு லாரிகளில் சரக்கு ஏற்றி சென்ற டிரைவர்கள் ரூபாய் நோட்டு பிரச்சினையால் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில் லாரிகள் நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1500 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 4-நாட்கள் தொடர்ந்து லாரிகள் ஓடவில்லை. இதனால் 4 நாட்கள் ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் ரூ.100 நோட்டுகள் வழங்கப்படுகிறது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வழங்கப்படவில்லை. புதிய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால் லாரி வர்த்தகம் சீராக நடைபெறும் என்றார்.

    Next Story
    ×