என் மலர்

  செய்திகள்

  புதுவையில், நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்: நாராயணசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்
  X

  புதுவையில், நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்: நாராயணசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார்.
  புதுச்சேரி:

  புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

  மாலை 5 மணிக்கு பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலையில் இருந்து பிரசார பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். தொடர்ந்து அவர், திறந்த வேனில் சுந்தர மேஸ்திரி வீதி, சாத்தான் வீதி, திருவள்ளுவர் சாலை, லெனின் வீதி வழியாக சென்று மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பிரசாரம் செய்கிறார்.

  இதனைத்தொடர்ந்து மீண்டும் லெனின் வீதி வழியாக பஜனை மடம் வீதி, சாரம் மார்க்கெட், சக்தி நகர், வெண்ணிலா நகர், 100 அடி சாலை, அண்ணாநகர் வழியாக சென்று ரேணுகாம்பிகை கோவில் அருகே பிரசாரம் மேற்கொள்கிறார்.

  இதன் பின்னர் புவன் கரே வீதி, ஜீவானந்தம் பள்ளி வீதி, பள்ளிவாசல் வீதி வழியாக பெரியார் நகர் சென்று அங்குள்ள பால்வாடி அருகே நாராயணசாமியை ஆதரித்து பேசுகிறார்.

  இதனைத்தொடர்ந்து மீண்டும் பெரியார் நகர் வீதி வழியாக சென்று நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதி, சவரிபடையாச்சி வீதி சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இந்த பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்கிறார்.

  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பொறுப்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் மற்றும் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்- அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×