என் மலர்

    செய்திகள்

    நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு, என்.ஆர்.காங். ஆதரவு அளிக்குமா?: ரங்கசாமி மவுனத்தால் குழப்பம்
    X

    நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு, என்.ஆர்.காங். ஆதரவு அளிக்குமா?: ரங்கசாமி மவுனத்தால் குழப்பம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு, என்.ஆர்.காங். ஆதரவு அளிக்குமா என்பது குறித்து இன்று மாலை ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுடன் கூடிப் பேசி இறுதி கட்ட முடிவு எடுப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும். அ.தி. மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.

    புதுவையின் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த கட்சி தேர்தலில் போட்டியிடுமா? இல்லையா? என்பது பற்றியும் தெரிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவித ஆயத்த பணிகளையும் செய்யவில்லை.

    ஒரு வாரத்துக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது அ.தி.மு.க. ஆதரவு கேட்டால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது. ஆதரவு கேட்கவில்லை என்றால் வேறு முடிவு எடுப்பது என்று முடிவு செய்தனர்.

    ஆனால், இதுவரை அ.தி.மு.க. சார்பில் இருந்து ரங்கசாமியிடம் ஆதரவு கேட்கவில்லை. எனவே, என்.ஆர். காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது மர்மமாக இருக்கிறது.

    கட்சி தலைவர் ரங்கசாமியும் இதுபற்றி இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. நெல்லித்தோப்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    ஆனால், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை இதுவரை அறிவிக்காததால் கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம். அல்லது போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுக்கலாம்.

    இது சம்பந்தமாக இன்று மாலை ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுடன் கூடிப் பேசி இறுதி கட்ட முடிவு எடுப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தரப்பில் இருந்து ரங்கசாமியிடம் நாங்கள் உங்களிடம் முறைப்படி ஆதரவு கேட்க மாட்டோம். ஆனாலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று புதுவை மாநில நிர்வாகிகள் சிலர் கேட்டதாக தெரிகிறது. எனவே, அ.தி.மு.க.வை அவர் ஆதரிப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே பாரதிய ஜனதா தானாக முன்வந்து அ.தி.மு.க.வை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
    Next Story
    ×