என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கிருமாம்பாக்கம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

    கிருமாம்பாக்கம் அருகே மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியகோடி (வயது52), மீனவர். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். திருமண வயதை கடந்தும் 4 மகள்களுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை. இதனால் புண்ணியகோடி வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கத்தினால் புண்ணியகோடிக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

    ஏற்கனவே மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என வேதனையில் இருந்த புண்ணியகோடிக்கு உடல்நலமும் பாதித்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புண்ணியகோடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×