என் மலர்
செய்திகள்

குன்றத்தூர் அருகே ஓடும் பஸ்சில் தீப்பிடித்தது: 30 பயணிகள் தப்பினர்
பூந்தமல்லி:
வடபழினியில் இருந்து குன்றத்தூர் நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்.88எம்) சென்றது.
டிரைவர் விநாயகம் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக சுந்தர மூர்த்தி இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
காலை 9 மணி அளவில் கோவூரை அடுத்த மூன்றாம் கட்டளை குன்றத்தூர் சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் பின்பக்க வலது புற டயரில் தீப்பற்றி கரும்புகை வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பதட்டம் அடைந்த பயணிகள் முன்டியடித்து கீழே இறங்கினர்.
பஸ்சின் டயரில் பிடித்த தீயை டிரைவர் மற்றும் கண்டக்டர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். உராய்வின் காரணமாக டயரில் தீப்பிடித்ததாக தெரிகிறது.
டயரில் தீப்பிடித்தவுடன் உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தியதால் தீ பரவவில்லை. இல்லையெனில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தால் இன்று காலை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






