என் மலர்
செய்திகள்

ரெட்டியார்பாளையம் அருகே தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
ரெட்டியார்பாளையம் அருகே தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் அருகே முத்துபிள்ளை பாளையம் ராதா நகரை சேர்ந்தவர் தனுசு (வயது50) தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு ராஜசுலோசனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவர் அவதியடைந்து வந்தார். இதனால் வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்தார். ஆஸ்பத்திரியிலும் காண்பித்தும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று தனுசுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த தனுசு வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story