search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்- பேரணி
    X

    புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்- பேரணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி வாரியத்தை செயல்படுத்த வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்த பட்சம் ரூ.50 என நிர்ணயிக்க வேண்டும், அதனைத்தொடர்ந்து கிலோ மீட்டருக்கு ரூ. 20 நிர்ணயம் செய்ய வேண்டும்,

    தமிழகத்தைப் போல் புதுவையில் இலவச ஆட்டோ மீட்டர் வழங்க வேண்டும், இரு சக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு அனுமதி வழங்க கூடாது, தீபாவளி போனஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் இன்று (புதன்கிழமை) ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்வார்கள்.

    புதுவை மாநில அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டு போராட்ட குழுவினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து பேரணி செல்ல ரோடியர் மில் திடல் எதிரே திரண்டனர்.

    தங்களது ஆட்டோக்களை ரோடியர் மில் திடலிலும், புதுவை - கடலூர் சாலையின் இருபுறத்திலும் நிறுத்தினர். பின்னர் சட்டசபை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணிக்கு கூட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பேரணியில் பல்வேறு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் டிரைவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சட்டசபை நோக்கி வந்தது.நேரு வீதி- மி‌ஷன் வீதி சந்திப்பில் பேரணி வந்தபோது, திடீரென ஆட்டோ டிரைவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் மி‌ஷன் வீதியில் உள்ள இருசக்கர வாகன வாடகை நிலையங்களை முற்றுகையிட முயன்றனர். இதனை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

    தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட் டம் காரணமாக இன்று பள்ளிகளுக்கு ஆட் டோவில் செல்லும் மாணவ- மாணவிகளை பெற்றோர்களே தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    ஆட்டோ டிரைவர்களின் இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. தொழிற் சங்கங்கள் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×