search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் சிறுமி பலி: 3 பேர் படுகாயம்
    X

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் சிறுமி பலி: 3 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் சிறுமி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே தமிழக பகுதியான இரண்டாயிரம் வளாகம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். (வயது 41). மாட்டு வண்டி தொழிலாளி. இவர்களது மகள் தேஜாஸ்ரீ (வயது 7), மகன் பிரதீஷ் (5). இவர்கள் இருவரும் பாகூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    இன்று காலை சந்திரசேகர் வெளியே சென்று விட்டதால் அவரது உறவினர் மகனான அஜித் (16) என்பவர் மோட்டார் சைக்கிளில் தேஜாஸ்ரீயையும், பிரதீசையும் பள்ளிக்கு அழைத்து சென்றார். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த அழகர் மகன் மனோகர் (1¼) என்பவரும் அதே மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

    சித்தேரி அணைக்கட்டு என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுஜித் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தேஜாஸ்ரீ, பிரதீஷ், மனோஜ் ஆகிய 4 பேரு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வர வழைத்தனர். பின்னர் காயம் அடைந்த 4 பேரும் பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேஜாஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுஜித்தும், பிரதீசும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×