என் மலர்

    செய்திகள்

    வில்லியனூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வில்லியனூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த அம்மா நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. உமா என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட அய்யனார் சமீப காலமாக சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது மனைவி உமா கண்டித்து வந்தார். இதுபோல் நேற்று இரவு அய்யனார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை உமா கண்டித்த போது கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உமா தூங்கி விட்டார்.

    இந்த நிலையில் மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டின் முன்பு உள்ள கூரை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×