என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
  X

  திருப்பூரில் குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் குழந்தையை பார்க்க மனைவி அனுமதி மறுக்கப்பட்டதால் சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
  திருப்பூர்:

  திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜாயின் மார்க் (வயது 42). லாரி டிரைவர். இவரது மனைவி கல்பனா (38). இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 2-வது பெண் குழந்தை பிறந்து 2 மாதமே ஆகிறது.

  இந்நிலையில் ஜாயின் மார்க்குக்கும் கல்பனாவின் அக்காள் பத்மாவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இதில் பத்மாவதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

  முதல் மனைவி கல்பனாவிற்கு பிறந்த கடைசி குழந்தையை பார்க்க ஆவலுடன் ஜாயின் மார்க் வீட்டுக்கு சென்றார். ஆனால் குழந்தையை பார்க்க கல்பனா அனுமதிக்கவில்லை.

  இதில் விரக்தியடைந்த ஜாயின் மார்க் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×