என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் 3 மணி நேரம் பெய்த பலத்த மழை
    X

    கொடைக்கானலில் 3 மணி நேரம் பெய்த பலத்த மழை

    கொடைக்கானலில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து எடுத்து வந்தது. இதனால் மக்கள் கொடைக் கானல், ஊட்டி, போன்ற மலைப் பகுதி சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வந்தனர். கொடைக்கானலில் ஒரே சமயத்தில் அதிகமான மக்கள் வந்ததால் லாட்ஜ்கள் நிரம்பி வழிந்தன. கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    இதனிடையே நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 12 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் முழுமையாக தணிந்து குளு குளு சீதோசனம் காணப்பட்டது.

    அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந் தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்தது விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் காரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய செடிகள் காய்ந்த நிலையில் இருந்து மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. பலத்த மழையின் காரணமாக கொடைக்கானல் ஏரிச்சாலையில் மரம் முறிந்து மின்வயர்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மின்வாரிய ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் மின்சாரம் சப்ளை இருந்தது. மற்ற இடங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிபட்டனர்.

    இதேபோல் திண்டுக்கல் மற்றும் வேடசந்தூரில் நேற்று இரவு மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இதனால் இரவு வெப்பம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த மக்கள் மழையின் காரணமாக ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்ட தால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×