என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்னி காரில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது- 1,650 கிலோ அரிசி பறிமுதல்
- குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.
- 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரேஷன் அரிசி கடத்தி வருபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் நேற்று இரவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (24) என்பதும், வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி வந்தததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.