என் மலர்
சினிமா செய்திகள்

நடிகை குஷ்பூ
சினிமாவில் அறிமுகமாகும் மகள்... அதிரடி முடிவெடுத்த குஷ்பு
இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தனது நடிப்பு பயிற்சியை முடித்து விட்டு சினிமாவில் கால்பதிக்க தயாராக உள்ளதாக குஷ்பு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சினிமா திரையுலகில் நட்சத்திரங்களின் வாரிசுகள் கால் பதித்து வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நட்சத்திர தம்பதியரான இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தனது நடிப்பு பயிற்சியை முடித்து விட்டு சினிமா துறையில் களமிறங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பதிவில், ‛‛என்னோட மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ஆனால், அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, குஷ்பூவை பாலோ செய்யும் ரசிகர்கள், குஷ்புவை போலவே அவரது மகள் அவந்திகாவும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்.. திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்... ஏன் தெரியுமா?
Next Story






