என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா அதிகரிப்பு
    X

    டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா அதிகரிப்பு

    • கடந்த வெள்ளிக்கிழமை இதுவரை இல்லாத அளவிற்கு 98 பைசா குறைந்து 89.66 ரூபாயாக இருந்தது.
    • இன்று 46 பைசா அதிகரித்து 89.20 ரூபாயாக உள்ளது.

    வெள்ளிக்கிழமை வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் டாலருக்கு இணையாக இந்தியாவின் பணமதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 98 பைசா குறைந்து 89.66 ரூபாயாக இருந்தது.

    இன்று காலை அந்நிய செலாவணி தொடங்கியதும், டாலருக்கு இணையாக இந்தியாவின் பண மதிப்பு 98.46 ரூபாயாக இருந்தது. பின்னர் 89.05 மற்றும் 89.50 ஆக இருந்தது. இறுதியாக 89.20 ரூபாயில் நிறைவடைந்தது. இதனால் 46 பைசா அதிகாரித்துள்ளது.

    வங்கிகள் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்ததும், உலகளாவிய கக்சா எண்ணெய் விலை குறைவும் டாலருக்கு இணையாக இந்திய பண மதிப்பு உயர்வுக்கு காரணமாகும்.

    நவம்பர் 14 வார இறுதியில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.543 பில்லியன் டாலர் உயர்ந்து 692.576 பில்லியன் டாலராக உள்ளது.

    Next Story
    ×