என் மலர்
இந்தியா

RAPIDO: ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் கால்பதித்த பைக் டாக்ஸி நிறுவனம்!
- இதற்காக, 'ஒன்லி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
2015 முதல் இயங்கி வரும் பிரபல பைக் டாக்ஸி தளமான ரேபிடோ, ஆனலைன் உணவு டெலிவரி துறையில் நுழைந்துள்ளது.
இதற்காக, 'ஒன்லி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவைகள் தற்போது பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கின்றன.
ரேபிடோ வாவ், ஈட் ஃபிட், கிறிஸ்பி க்ரீம் போன்ற பிராண்டுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தற்போது, ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த சூழலில், ரேபிடோ இந்த துறையில் அவற்றுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்று தெரிகிறது.
உணவகங்களிலிருந்து 8-15 சதவீத கமிஷனை மட்டுமே வசூலிப்பதன் மூலம் இந்தத் துறையில் சிறந்து விளங்க ரேபிடோ நம்புகிறது.
வருங்காலங்களில் இந்த ஒன்லி உணவு டெலிவரி சேவை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Next Story






