என் மலர்
செய்திகள்

பெரம்பூர் தொகுதியில் மீண்டும் ஓட்டுகளை எண்ண வேண்டும்: என்.ஆர் தனபாலன் கோரிக்கை
பெரம்பூர் தொகுதியில் 519 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் கோரிக்கை மனு அளித்துள்ளார்
சென்னை :
பெருந்தலைவர் மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டது. அக்கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அவர் 519 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று என்.ஆர் தனபாலன் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது சார்பில் வழக்கறிஞர் மணிவாசகம் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து பெரம்பூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். மொத்தமுள்ள 287 பாகங்களில் 281 வரை முன்னணியில் வந்த என்.ஆர். தனபாலனுக்கு கடைசியாக 519 வாக்குகள் குறைவாக உள்ளது என்று வாக்கு எண்ணிக்கையை முடித்து கொண்டனர்.
ஆதலால் பெரம்பூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் கமிஷனரிடம் நல்ல முடிவை விரைவில் எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் உயர்நீதிமன்றத்தை நாடி அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story