search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் குறைக்கப்படும்: தமிழிசை பேட்டி
    X

    ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் குறைக்கப்படும்: தமிழிசை பேட்டி

    ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #gst
    நெல்லை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட நாள். இதை பா.ஜனதா கட்சி மட்டுமல்ல. மக்களே கொண்டாடுகிறார்கள். 133 நாடுகளில் இருக்கும் இந்த மாபெரும் திட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்தி மோடி வெற்றி கண்டுள்ளார்.

    ஜி.எஸ்.டி. மூலமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ஒரு லட்சம் கோடி அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மாநிலங்களுக்கு வரும் வருவாய் தாமதமாகும் என்பது தவறான கருத்து. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. காரணமாக பொருட்களின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் படிப்படியாக குறைக்கப்படும்.

    தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு ஒரு உள்ளாட்சி குழு இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். #tamilisai #gst
    Next Story
    ×