என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆர்.கே.நகரில் தேர்தல் செலவின விலக்கு பெறும் தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுகோள்
By
மாலை மலர்25 Nov 2017 10:05 AM GMT (Updated: 25 Nov 2017 10:05 AM GMT)

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களில், தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை அனுப்பும்படி தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் செலவுத் தொகையில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 11-டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை 27.11.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் / தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 04.12.2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×