என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செல்லுமா?: திங்கட்கிழமை தேர்தல் கமிஷன் தீர்ப்பு
தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது செல்லுமா என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
இரு அணியினரும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் தலைமை தேர்தல் கமிஷனை நாடியுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பி.எஸ். தரப்பில் முதலில் தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டது. அதற்கு சசிகலா தரப்பில் கடந்த வாரம் விளக்கம் அளித்து பதில் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஓ.பி.எஸ். அணியினர் தலைமை தேர்தல் கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானது விதிமீறல்கள் உள்ளதாக சுட்டி காட்டினார்கள்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று சசிகலா தரப்பினர் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். அ.தி.மு.க. பிளவுபடவில்லை. எனவே ஓ.பி.எஸ். அணியினர் கூறியுள்ள கோரிக்கைகளை ஏற்க கூடாது என்றனர்.
மேலும் சசிகலா தற்காலிகமாகத்தான் பொதுச்செயலாளராக இருப்பதாகவும், விரைவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் சசிகலா தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

இரு அணியினரும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து அதுபற்றி தற்போது தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. வருகிற திங்கட்கிழமை (20-ந்தேதி) தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்ரேயன் எம்.பி. மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் 24-ந்தேதி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷன் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமை கூட தீர்ப்பு வந்து விடலாம்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என்பதை நிரூபிக்க நாங்கள் வலுவான ஆதாரங்களை தாக்கல் செய்து இருக்கிறோம்.
சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. தற்காலிகமாகதான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வில் தற்காலிக பொதுச்செயலாளர் என்று யாரையும் சொல்ல இயலாது. அதற்கு கட்சி விதிகளில் இடமில்லை.
சசிகலா தேர்வு செய்வதற்காகவே பொதுக்குழுவை கூட்டி கட்சி விதியை திருத்தினார்கள். அ.தி.மு.க.வில் அடிப்படை விதியை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு கிடையாது. எனவே சசிகலா தேர்வானது செல்லாது.
இதை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சசிகலாவுக்கு பொதுச்செயலாளராக நீடிக்க அதிகாரம் இல்லை என்ற அறிவிப்பு வந்தாலே அவரால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது போய்விடும்.
ஆகையால் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது நிரூபணமாகும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.
இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

Next Story