என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்
தஞ்சாவூர்:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
இன்று அவர் தஞ்சை விளார் சாலை பைபாஸ் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக அவர் தஞ்சை கீழ வாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.அப்பகுதியில் தே.மு.தி.க. கொடி நாளை முன்னிட்டு கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நிலையில்லாத ஆட்சி, நிலையில்லாத கவர்னர் உள்ளார். டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
அது பற்றி எல்லாம் நீங்கள் கேட்பது இல்லை. அரசியல் பற்றி தான் கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினையில் தலையிட நான் விரும்பவில்லை. இக்கறைக்கு அக்கறை பச்சை போல் உள்ளது.தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வராது. விவசாயிகளை பாதுகாக்க எந்த உதவியும் செய்யவில்லை. இது தொடர்பாக யாரும் அறிக்கை கூட விடவில்லை.
நான் மக்கள் குறை பற்றிதான் பேசுவேன். உண்மையை தான் சொல்கிறேன். தே.மு.தி.க. வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, அவைத்தலைவர் சிவனேசன், தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு, வடக்கு மாவட்ட யெலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் புஷ்பராஜ், ரமேஷ், வசந்த பெரியசாமி, நாகநாதன், கரந்தை சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.