என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் தற்கொலை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததே காரணம்- பழ.நெடுமாறன்
    X

    விவசாயிகள் தற்கொலை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததே காரணம்- பழ.நெடுமாறன்

    மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய 'வள்ளலார் மூட்டிய புரட்சி' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

    இந்த விழாவில் பங்கேற்க வந்த பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியும் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவிட்டதால் காவிரி படுகை பகுதியில் சுமார் 102 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததே தமிழக விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சத்திற்கு குறைவு இல்லாமல் இழப்பீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் தமிழக அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கையாக கருதி விரைவில் வறட்சி குறித்த ஆய்வறிக்கையை முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    இத்தகைய நிலைமை தமிழக விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வராமல் இருக்க தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் ஆவணம் செய்ய வேண்டும். ஏறு தழுவுதல் என்ற பெயரில் சங்க காலத்தில் இருந்து தமிழர்கள் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை நடத்தி வருகிறார்கள். தமிழர்களின் பண்பாட்டோடு ஒன்றிய விழாவாக ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு விழா உள்ளது.

    இதனை உணராமல் உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்து இருப்பது தவறு. மத்திய அரசு அதற்குரிய சட்ட திருத்தத்தை செய்து அதை அனுமதிக்க வேண்டும். வருகிற பொங்கல் திருவிழாவிற்குள் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லை என்றால் தடையை மீறி தமிழகத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×