என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுப் பிரச்சனையில் அரசியல் கட்சிகளிடையே ஒருங்கிணைவு அவசியம்: திருமாவளவன்
    X

    பொதுப் பிரச்சனையில் அரசியல் கட்சிகளிடையே ஒருங்கிணைவு அவசியம்: திருமாவளவன்

    பொதுப் பிரச்சனையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயக்கம் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு, கருத்தரங்குகள், மாநாடுகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப்பேரவை சார்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கட்சிகளை ஒருங்கிணைப்பதால் பொது சிவில் சட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.

    மேலும், பொதுப் பிரச்சனையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயக்கம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. எம்.பி., கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×