என் மலர்

    செய்திகள்

    நாராயணசாமி நாளை வேட்பு மனு தாக்கல்
    X

    நாராயணசாமி நாளை வேட்பு மனு தாக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்திசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஓம்சக்தி சேகர் 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் தமிழ் செங்கோலன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவரை தவிர, வேறு யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    இன்று புதுவை அரசு விடுமுறை நாள் ஆகும். எனவே, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் ஆகும். முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். நாளை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 1.30 முதல் 3.30 மணி வரையிலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நல்ல நேரம் இருப்பதாக கணக்கிட்டு உள்ளனர். எனவே, இதில் ஏதாவது ஒரு நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாராயணசாமி முடிவு செய்துள்ளார்.

    எந்த நேரத்தில் மனு தாக்கல் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு எடுக்கிறார்கள். கூட்டணி கட்சி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய உள்ளார்.

    நாளை மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 5-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அதன் பிறகு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
    Next Story
    ×