என் மலர்

  செய்திகள்

  வாகன சோதனை பற்றி கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்து
  X

  வாகன சோதனை பற்றி கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டசபையில் பங்கேற்று வரும் எங்களது வாகனங்களை 3-வது நாளாக சோதனை நடத்தி அனுப்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  அப்போது அவரிடம் சட்டசபைக்கு வந்த உங்களிடம் இன்றும் வாகன சோதனையிடப்பட்டதா? என்று நிருபர்கள் கேட்டனர்.

  இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

  சட்டசபையில் பங்கேற்று வரும் எங்களது வாகனங்களை 3-வது நாளாக சோதனை நடத்தி அனுப்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

  நாட்டில் எவ்வளவோ கொலை-கொள்ளை நடக்கிறது. நேற்று கூட 3 கொலை நடந்துள்ளது. அதுவும் பெண்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

  சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்களிடம் இப்படி சோதனை செய்வது இந்த ஆட்சியின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×