என் மலர்
செய்திகள்

ஊட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் பெட்ரோல் பங்கில் ரூ.47 லட்சம் பணம் பறிமுதல்
ஊட்டி, மே.15–
தமிழக தேர்தலையொட்டி பறக்கும் படையினர், வருமான வரி துறையினர் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
நாளை தேர்தல் நடப்பதால் தற்போது 24 மணி நேரமும் அரசியல் கட்சியினரை கண்காணித்து வருகிறார்கள். கடைசி 2 நாளில் பண பட்டுவாடா அதிகமாக நடைபெறும் என கணிக்கப்பட்டு உள்ளதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் அ.தி.மு.க. பிர முகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் ரூ.47 லட்சத்தை வருமான வரி துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் போஜன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு வைத்து கெத்தி பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மற்ற கட்சியினர் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து வருமான வரித்துறையினர் விரைந்து வந்து பெட்ரோல் பங்கை சோதனையிட்டனர். அப்போது அங்கு ரூ.47 லட்சம் இருந்ததை கண்டு பிடித்தனர்.
பின்னர் இந்த பணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ரூ.47 லட்சத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.






