என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி தொகுதியில் வைகோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
    X

    கோவில்பட்டி தொகுதியில் வைகோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

    சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த வினாயக் ரமேஷ் என்பவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற உறுப்பினராக பலமுறை பதவி வகித்த வைகோ, ம.தி.மு.க., தே.மு.தி.க., இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

    இருபது ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கோவில்பட்டி தொகுதியில் இருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று பிற்பகல் ஒருமணி அளவில் தொகுதி தேர்தல் அலுவலரிடம் வைகோ தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று செய்திகள் வெளியாகின.

    பச்சை தலைப்பாகை, கருப்பு மேல்துண்டுடன் வந்திருந்த கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த வைகோ, அங்கு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று மனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு மாற்று வேட்பாளராக வினாயக் ரமேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே வந்த செய்திகளின்படி, வைகோ இந்த தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுதொடர்பான தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×