என் மலர்


படையாண்ட மாவீரா
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதைக்களம்
அரியலூர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் வ.கௌதமன் ஊருக்கு நல்லது செய்து வருகிறார். ஒருநாள் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு கொடுமை நடக்க, அதை தட்டி கேட்க வ.கௌதமன் சென்று, காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிறார். இதை அறிந்த மேல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், வ.கௌதமனை வளர விடக்கூடாது என்று திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து, எப்படி மக்கள் பணி செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வ.கௌதமன், கம்பீரமான தோற்றத்துடன், நடை, உடை பாவனைகள் அனைத்தும் விஜயகாந்த் சாயலில் தெரிகிறார். மக்களுக்காக போராடுவது, அதிகார வர்க்கத்தை எதிர்த்து செயல்படுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.
காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, வழக்கமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காடுவெட்டி குருவின் இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் கெளதமனின் நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. ஆடுகளம் நரேன் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காடுவெட்டி குருவின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் வ.கெளதமன். பலருக்கும் அவரை பற்றி தெரியாத விஷயங்களை படமாக்கி இருக்கிறார். அதே சமயம் மக்களுக்கு செய்த நன்மைகளை மட்டுமே அதிகம் காட்சிப்படுத்தி இருப்பதும், கொஞ்சம் பில்டப் காட்சிகளும் வேண்டுமென்றே புகுத்தி் இருப்பது பலவினம்.
இசை
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் காட்சிகளை கலர்புல்லாக காண்பித்து இருக்கிறார்.
தயாரிப்பு
வி.கே ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Very good movie
அருமை
அருமையான படம், மிக தெளிவான இசை மற்றும் பாடல் வரிகள் . காண்போர் அனைவரும் கண்கலங்குவதை பார்க்க முடிகிறது . இன்னும் சற்று விளம்பரம் செய்திருந்தால் ,இன்னும் பெரியவற்றியை கொடுத்திருக்கும்















