என் மலர்


லவ் மேரேஜ்
90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கை கதையை மையமாக இருக்கும் திரைப்படம்.
கதைக்களம்
உசிலம்பட்டியில் வாழ்ந்து வரும் விக்ரம் பிரபு, 33 வயதான நிலையில் திருமணம் நடக்காமல் இருக்கிறது. இவருக்கு எந்த பெண்ணும் அமையாததால், இவரது உறவினர்கள், ஊர் காரர்கள் அனைவரும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் கோபிச் செட்டிபாளையத்தில் இருக்கும் நாயகி சுஷ்மிதாவை விக்ரம் பிரபு பெற்றோர்கள் நிச்சயம் செய்கிறார்கள்.
இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருமணம் நிச்சயம் செய்ய கோபிச் செட்டிபாளையம் செல்கிறார்கள். நிச்சயம் செய்த பின் லாக்டவுன் போடுவதால் பெண் வீட்டிலேயே அனைவரும் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. லாக்டவுன் இருப்பதால் ஒருவாரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் நாயகி சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.
இறுதியில் திருமணம் கனவோடு இருக்கும் விக்ரம் பிரபுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? சுஷ்மிதா எதற்காக வீட்டை விட்டு சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விக்ரம் பிரபு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்து இருக்கிறார். பெண் பார்க்க செல்வது, பெண்ணுடன் பேச தயங்குவது என கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் சுஷ்மிதா, அமைதியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் மீனாட்சி தினேஷ், துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். விக்ரம் பிரபு உடன் இவர் பேசும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வின்னர் ராமசந்திரன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். 30 வயது கடந்த ஒரு இளைஞன், திருமணம் ஆகாமல் இருந்தால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, ஊர் கேட்கும் கேள்விகள் என திரைக்கதை அமைத்து இருக்கிறார். கொஞ்சம் காமெடியும், கொஞ்சம் சிந்திக்கும் வசனங்கள் படத்திற்கு பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.
இசை
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
Assure Films, Rise East நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.












