என் மலர்


குற்றம் புதிது
காணாமல் போகும் பெண், அதை சுற்றி நடக்கும் விசாரணையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.
கதைக்களம்
நாயகன் தருண் விஜய் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதே ஊரில் காவல்துறை உதவி ஆணையராக இருக்கும் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, வேலை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது திடீரென்று மாயமாகி விடுகிறார்.
தந்தை மதுசூதனன் ராவுக்கு, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி நாயகன் தருண் விஜய் போலீசில் சரணடைகிறார்.
இறுதியில் நாயகன் தருண் விஜய் கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்? மாயமான நாயகி சேஷ்விதா கனிமொழி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தருண் விஜய் இயல்பாக நடித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். மதுசூதனராவ் ஒரு தந்தையாகவும் அதிகாரியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியதர்ஷினி ராஜ்குமார், ராம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காணாமல் போகும் பெண், அதை சுற்றி நடக்கும் விசாரணையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங். யூகிக்க முடியாத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை என வித்தியாசமான கிரைம் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் எதிர்ப்பாத்திராத திரைக்கதை அமைத்திருப்பதில் இயக்குனர் கவனிக்க வைக்கிறார். வித்தியாசமான குற்றம் புதிதுக்கு வாழ்த்துகள். ஆனால், கொஞ்சம் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் நல்ல விஷுவல்ஸை கொடுத்துள்ளார்.
இசை
இசையமைப்பாளர் கரண் பி கிருபா இசையும், பின்னணி இசையும் கவனிக்க வைத்து இருக்கிறது.
தயாரிப்பு
: GKR CINE ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










