search icon
என் மலர்tooltip icon
    < Back
    Asvins
    Asvins

    அஸ்வின்ஸ்

    இயக்குனர்: தருண் தேஜா
    எடிட்டர்:வெங்கட் ராஜன்
    ஒளிப்பதிவாளர்:எட்வின்
    இசை:விஜய் சித்தார்த்
    வெளியீட்டு தேதி:2023-06-23
    Points:1980

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை13678403132
    Point19862874433278
    கரு

    அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்கள் சிலர் சந்திக்கும் பிரச்சினை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் :

    நாயகன் வசந்த்ரவி மற்றும் அவரின் நண்பர்கள் அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இதற்காக உலகின் மிகவும் ஆபத்தான பகுதி எனச் சொல்லப்படுகிற லண்டன் தீவில் இருக்கும் ஒரு பாழடைந்த மேன்ஷனுக்கு செல்கிறார்கள். அங்கு நண்பர்கள் அனைவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். வசந்த்ரவி மட்டும் உயிருடன் இருக்கிறார்.

    இறுதியில் நண்பர்களை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? வசந்த் ரவி மட்டும் உயிருடன் இருக்க காரணம் என்ன? பாழடைந்த பங்களாவில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வசனம் :

    தருண் தேஜா வசனங்கள் பார்வையாளர்களுக்கு புரியாமல் படம் நகர்கிறது.

    ஒளிப்பதிவு :

    எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    படத்தொகுப்பு :

    வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. காட்சிகளை சுருக்கியிருக்கலாம்.

    இசை :

    விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

    இயக்கம்:

    திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா. ஆனால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்து இருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை தெளிவு இல்லாமல் பார்ப்பவர்களை குழப்பி இருக்கிறார் இயக்குனர். ஹாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் பார்ப்பவர்களுக்கு புரியாமல் கடந்து செல்கிறது.

    நடிகர்கள் 

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி திறமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் அசத்தி இருக்கிறார் நாயகி விமலா ராமன். மற்ற கதாபாத்திரங்கள் சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    காஸ்டியூம் :

    இடத்திற்கு ஏற்றார் போல் காஸ்டியூம் அமைத்துள்ளார் கஞ்சன் செய்ன்.

    சவுண்ட் எபெக்ட் :

    ஹரிஸ் சவுண்ட் எபெக்ட்டில் அசத்தியிருக்கிறார்.

    புரொடக்‌ஷன் :

     ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் 'அஸ்வின்ஸ்’ படத்தை தயாரித்துள்ளது.



    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×