search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    முதல்-மந்திரி பசவராஜ் மொம்மை தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
    X

    முதல்-மந்திரி பசவராஜ் மொம்மை தொகுதியில் 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்

    • 234-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கே இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளேன்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் 6 முறை மனு தாக்கல் செய்துள்ளார். முக்கிய தலைவர்கள் நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

    இந்தமுறை கர்நாடக தேர்தலில் பத்மராஜன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடும் சிக்காவி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் 234-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

    நான் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். வெற்றி பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

    அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நான் இவ்வாறு தேர்தலில் மனு தாக்கல் செய்து வருகிறேன். சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கே இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளேன். எனது வாழ்நாள் உள்ள வரை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.

    Next Story
    ×