என் மலர்tooltip icon

    வழிபாடு

    செம்பூர் காளியம்மன் கோவில் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது
    X

    செம்பூர் காளியம்மன் கோவில் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது

    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது.
    • அன்னதானம் வழங்கப்படுகிறது.

    செம்பூர், எச்.பி. நகர் மேற்கு மைசூர் காலனி ரோடு உள்ள மந்தா தீப் ஹெயிட்ஸ் வளாகத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் 12-ம் ஆண்டு திருவிழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமமும், மதியம் 12 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது.

    மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கணேஷ் அண்ணா ராய்கந்தி கலந்து கொள்கிறார். கோவில் விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரமேஷ் யோகிஸ்வரஸ், நிர்வாக உறுப்பினர்கள் முரளி, செல்வி கந்தன், முருகேஷ், சுனில் ஸ்ரீராம், லதா தாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×