search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டாரில் ஆஞ்சநேயர் கோவிலில் சனீஸ்வர ஹோமம் இன்று நடக்கிறது
    X

    திருவட்டாரில் ஆஞ்சநேயர் கோவிலில் சனீஸ்வர ஹோமம் இன்று நடக்கிறது

    • 108 சன்னியாசிகள் சங்கமம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
    • இந்த ஆலயத்தில் ஆகம வீதிகளின் படி பூஜைகள் செய்து வருகிறார்.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலின் அருகில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சாமியின் தரிசனம் பெற்ற ஆஞ்சநேய சித்தரான சந்தோஷ் சாமிகள் இந்த ஆலயத்தில் ஆகம வீதிகளின் படி பூஜைகள் செய்து வருகிறார். ஆலயத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், சாமுண்டி தேவி, பத்ரகாளியம்மன், சிவன், நந்திதேவர், மகாவிஷ்ணு, கிருஷ்ணர், சரஸ்வதி, சாஸ்தா, முருகன் உள்ளிட்ட சாமிகள் சன்னிதிகள் குருதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இங்கு நடைபெறும் அற்புதங்களையும், அதிசயங்களையும் கேட்டறிந்து நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த சன்னியாசிகள் குழுவினர் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று(சனிக்கிழமை) நடைபெறும் சனீஸ்வர ஹோமம், 108 சன்னியாசிகள் சங்கமம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோவிலின் 48-வது மாடதிபதி மூப்பில் சாமியார் புஷ்பாஞ்சலி சாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ராமநாத சாமிகளும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர். அதன்படி இன்று காலை 8 மணிக்கு குழந்தைகளுக்கான சனீஷ்வர ஹோமம், மாலை 4 மணி அளவில் சன்னியாசிகள் சங்கமமும், குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் ஆசி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இந்த சனீஸ்வர ஹோமத்தில் பங்கேற்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வியில் ஆர்வம் ஏற்படுதல், தன்னம்பிக்கை அதிகரிப்பது மற்றும் பல தோஷங்கள் மாறி நல்வாழ்வு அமையும். ஹோமத்தில் பங்கேற்போருக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, தினமும் பூஜை செய்வதற்கான கவச மந்திரமும் வழங்கப்படும். பக்தர்களின் வேண்டுகோளின் படி ஆலயத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புனித ஹோமத்தில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

    Next Story
    ×