search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முளைப்பாரிகளை சுமந்து வந்த பெண்கள்.
    X
    கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முளைப்பாரிகளை சுமந்து வந்த பெண்கள்.

    கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகம்: முளைப்பாரிகளை சுமந்து வந்த பெண்கள்

    திருப்பூர் கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடை பெற்ற முளைப்பாலிகை ஊர்வலத்தில் 1000 பெண்கள் பங்கேற்றனர்.
    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் உள்ள கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு நடை பெறுகிறது.

    இதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகள் திருப்பூர் மக்கள் நல அறக்கட் டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் இரவு, பகலாக நடைபெற்று வரு கிறது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பிரசன்னாபிஷேகம், அக்னிஸங்க்ரஹணம், தீர்த்தஸங்க்ரஹணம், பரிவார கலாகர்ஷணம், யாகசாலை அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள் ளிட்ட சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மாலை 4 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.

    அணைபாளையம் மாகாளி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத் தில் 1000 பெண்கள் முளைப் பாரி மற்றும் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வல மாக வந்து கந்தபெருமான் கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் முருகனுக்கு முதற்கால யாக பூஜை தொடங்கியது.

    இதையடுத்து அங்குரார்ப் பனம், ரஷாபந்தனம், கும் பாலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேற்று காலை கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா ஆய்வு செய்தார்.

    அப்போது விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர் களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×