search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்
    X

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்

    கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் எங்கும் நாளை கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு உகந்த வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    பூஜைக்குரியவை

    பூஜைக்குரிய இலை : துளசி இலை
    பூஜைக்குரிய மலர் :- மல்லிகை.
    நிவேதனப் பொருட்கள் :--பால், வெண்ணை,
    தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.
    படிக்க வேண்டிய நூல் :- பகவத்கீதை, கிருஷ்ண அஷ்டோத்ர
    நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம்,
    ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி,
    ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள்.

    வழுக்குமரம் ஏறுதல்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில், கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும். தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    உறியடி :

    உறி ஒன்றில் சிறு மண் சட்டி ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

    அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள். சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே நடத்தப்படுகிறது.

    சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :


    கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவி களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

    திருப்பாதத்தின் மகிமை :


    கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் ‘நமோ நாராயணா’ என்ற எட்டு எழுத்து மந்திரமும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் வேஷம் :

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    பஜகோவிந்தம் :

    கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
    Next Story
    ×