search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனின் மும்மூர்த்திகளின் வடிவம்
    X

    முருகனின் மும்மூர்த்திகளின் வடிவம்

    முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து பக்தர்களை காக்கிறார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
    சிவபெருமான் அம்சமாக அவதரித்த முருகப் பெருமான் மும்மூர்த்திகளின் வடிவானவர்.

    மு-என்ற எழுத்து முகுந்தன் என்ற விஷ்ணுவையும், ரு-என்ற எழுத்து ருத்திரனையும், க-என்ற எழுத்து கமலத்தில் இருந்து உதித்த பிரம்மனையும் குறிக்கும்.

    முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து பக்தர்களை காக்கிறார்.

    அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், மாசி, ஆவணி மாத திருவிழாவின் போது மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாகவும், மறுநாள் (8-ம் திருநாள்)காலையில் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாகவும் அருள்கிறார். மதியவேளையில் பச்சைபட்டு சாத்தி பெருமாள் அம்சத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
    Next Story
    ×